
தலைப்பு : இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகள் - 2
இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகள்' என்னும் இந்நூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. இது இரண்டாம் பகுதி. இதில் வளர்ச்சிப் பொருளாதாரமும், வளர்ச்சித் திட்டங்களும், பணவீக்கப் போக்குகளும், வெளிநாட்டு முதலின் பங்கும், போக்குவரத்து, வாணிபப் பிரச்சினைகளும், தொழிலாளர் பிரச்சினைகளும், பிராந்தியப் பொருளாதாரமும், சமுதாயப் பிரச்சினைகளும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. இது சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட புதுப் பாடத்திட்டப்படி B.A. பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பயன்படத்தக்கபடி எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் இன்றைய நாள் வரைக்குமான புள்ளி விவரங்களும், விளக்கங்களும், ஆய்வுகளும் தகுந்த இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள் நூலின் பல இடங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத் திட்டங்களை அமலாக்குவதில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க இயலாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணமாய் விளங்கும் சமுதாய, பண்பாட்டுக் காரணிகள் இந்நூலின் இறுதியில் பரந்த முறையில் விரிவாகத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.